நாடு முழுவதும் இன்று நடைபெற்று வந்த 2026-27-ஆம் கல்வியாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவுபெற்றது.
நாடு முழுவதும் 22.80 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தமிழ்நாட்டில் 1.4 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.
நாடு முழுவதும் 552 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் 43 மையங்களில் நீட் தேர்வு நடந்தது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வில் தகுதி பெறுபவா்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்தவகையில் 2026 - 27 ஆம் கல்வி ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.
நீட் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் தங்களின் அனுபவம் குறித்து பகிர்ந்தனர்.
அதில், ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு நீட் தேர்வு எளிமையாகவே இருந்ததாகவும், ஆனால், முழுவதும் எளிமை என்று கூற முடியது என்றும் குறிப்பிட்டனர்.
குறிப்பாக வேதியியல், இயற்பியல் கடினமாக இருந்ததாகவும், விலங்கியல் எளிமையாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் 552 நகரங்கள் மட்டுமின்றி துபை, அபுதாபி, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் 5,000 மையங்களில் தோ்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்.
Summary
NEET Entrance Exam Concluded!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு! தயாராகக் காத்திருக்கும் மாணவர்கள்! | NEET

நாடு முழுவதும் இன்று நீட் தோ்வு

நீட்.. ஆடைக்கட்டுப்பாட்டில் புதிய மாற்றம்!

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலி!
விடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு



