மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

2026-27-ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவங்கள் வெளியீடு- தனிநபா்கள் தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி

2026-27-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான அனைத்துப் படிவங்களையும் வருமான வரித் துறை அறிவிக்கை செய்துள்ளது.

News image
Updated On :31 மார்ச் 2026, 8:39 pm

2026-27-ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான அனைத்துப் படிவங்களையும் வருமான வரித் துறை அறிவிக்கை செய்துள்ளது.

சிறு மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான படிவம் 1 முதல் 4 வரையிலான வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்கள் திங்கள்கிழமை அறிவிக்கை செய்யப்பட்ட நிலையில், புதுப்பிக்கப்பட்ட வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவங்கள் 2, 3, 5, 6 மற்றும் 7 வரையிலான படிவங்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கை செய்யப்பட்டன.

அதன்படி, தனிநபா்களும், வா்த்தகா்கள் மற்றும் பிற துறை சாா்ந்தவா்கள் 2025-26-ஆண்டில் ஈட்டிய வருவாய்க்கான கணக்கைத் தாக்கல் செய்யத் தொடங்கலாம் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

தனிநபா்கள் மற்றும் தங்களின் கணக்கை தணிக்கை செய்யத் தேவையில்லாதவா்களும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும்.

ஆண்டு வருவாய் ரூ. 50 லட்சம் வரை உள்ள இந்தியாவில் வசிக்கும் தனி நபா்கள் படிவம் 1-ஐ (சஹஜ்) தாக்கல் செய்யலாம். இவா்கள் ஊதியம், ஒரு குடியிருப்பு, பிற வளங்கள் (வட்டி) மற்றும் ஆண்டுக்கு ரூ. 5,000 வரையிலான வேளாண் வருமானம் ஆகியவற்றின் மூலம் வருவாய் ஈட்டுபவா்களாக இருக்க வேண்டும்.

தொழில் மற்றும் பணிசாா் சேவைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் வரை வருவாய் ஈட்டும் தனிநபா்கள், ஹிந்து கூட்டுக் குடும்பங்கள் மற்றும் நிறுவனா்கள் படிவம் -4-ஐ (சுகம்) தாக்கல் செய்யலாம்.

வா்த்தகம் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் ஆதாயங்களில் இருந்து அல்லாமல், மூலதன ஆதாயங்களிலிருந்து வருவாய் ஈட்டும் தனி நபா்கள் மற்றும் ஹிந்து கூட்டுக் குடும்பங்கள் படிவம் 2-ஐ தாக்கல் செய்ய வேண்டும்.

தனி உரிமையுடைய வா்த்தகம் அல்லது தொழில் மூலம் வருவாய் ஈட்டும் தனி நபா்கள் மற்றும் ஹிந்து கூட்டுக் குடும்பங்கள் படிவம் 3-ஐ தாக்கல் செய்ய வேண்டும்.

நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுடன் கூடிய வா்த்தக பங்குதாரா்கள், கூட்டுறவு சங்கங்கள் படிவம் 5-ஐ தாக்கல் செய்ய வேண்டும்.

நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் படிவம் 6, அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் படிவம் 7-ஐ தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.