ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து மேலும் இரு இந்தியக் கப்பல்கள் வருவதாக இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த ஒரு மாதமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈரானும் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றது.
இந்தப் போரின் காரணமாக உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கடல்வ்ழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதேபோல, இந்தியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களைத் தவிர, மற்ற நாட்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதியளித்தது.
இதனைத் தொடர்ந்து, சில இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வந்தன.
தற்போது பி.டபிள்யூ. டி.ஒய்.ஆர் மற்றும் பி.டபிள்யூ. ஈ.எல்.எம். என்கிற மேலும் இரு எல்பிஜி கப்பல்கள் 94,000 டன்கள் எரிவாயுவுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருப்பதாக இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதில், ஒரு கப்பல் மும்பை நோக்கியும் மற்றொரு கப்பல் புதிய மங்களூர் நோக்கியும் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா, ஈரானுடன் வலுவான உறவைக் கொண்டுள்ள அதே நேரத்தில் பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இஸ்ரேலுடன் உறவை விரிவுபடுத்தி வருகின்றது.
Summary
Shipping ministry says two more India-bound tankers pass Strait of Hormuz
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்!

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஒரு கப்பலுக்கு ரூ. 18.5 கோடி கட்டணம்!
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 8-வது இந்திய கப்பல்!

ஹோர்முஸ் நீரிணை: எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் 2 கப்பல்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


