மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களுக்கு 4 இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள்: கர்நாடக அரசு பரிசீலனை

கர்நாடகத்தில் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களுக்கு இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து துணை முதல்வர் சிவகுமார் பரிசீலனை

News image

சின்னசாமி திடல் - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 8:43 am

கர்நாடகத்தில் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களுக்கு இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தின் சின்னசாமி திடலில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் எம்எல்ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து மாநில சட்டப்பேரவையில் வியாழக்கிழமையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசுகையில், ”இந்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திடம் பேசவுள்ளேன். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிய வசதிகள் செய்யப்பட்டு தருவதை உறுதி செய்ய விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவையில் ”மாநிலத்தில் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் டிக்கெட்டுகள் வழங்கவில்லை. அவர்கள் விஐபி-க்கள் என்பதால், வரிசையில் நிற்க முடியாது. அவர்களுக்கு தனி இருக்கை அமைப்புகளை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். திடலில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக தனி ஓய்வறை அமைக்க வேண்டும்.

அரசிடமிருந்து கிரிக்கெட் சங்கம் அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் கிடைக்கிறது. ஆனால், அவர்கள் எம்எல்ஏ-க்களை மதிப்பதில்லை.

அவர்கள் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள், அந்தளவுக்கு அவர்கள் பெரியாளாகி விட்டனர். பணத்தை வாங்கி அனுபவித்து வருகிறார்கள்.

நாங்கள் அவர்களுக்கு 16.32 ஏக்கர் நிலத்தை மாதம் சுமார் ரூ. 1,600-க்கு வழங்கியுள்ளோம். ஆனால், அவர்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆயிரக்கணக்கில் வசூலிக்கின்றனர். அவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் உள்ளது. இருப்பினும், நம்மைச் சுரண்டுகின்றனர்” என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதித்தனர்.

Summary

Will speak to KSCA officials, says Shivakumar on Karnataka MLAs' demand for IPL tickets

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.