தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மெட்டா நிறுவனத்தில் 700 ஊழியர்கள் பணிநீக்கம்!

மெட்டா நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது பற்றி..

News image

மெட்டா நிறுவனம் - IANS

Updated On :27 மார்ச் 2026, 6:28 am

மெட்டா தனது நிறுவனத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக சுமார் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.

செய்யறிவு தொழில்நுட்பப் பயன்பாட்டினால் ஐடி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சமீபமாக ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் மெட்டா நிறுவனமும் கடந்த ஜனவரியில் 1,000-க்கும் மேற்பட்டோரும், பிப்ரவரி மாதம் சுமார் 3,500க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது மேலும் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.

விற்பனை, மனிதவள மேலாண்மை, ஹார்டுவேர் ஆகிய பிரிவுகளில் இந்த ஆள்குறைப்பு நடக்கிறது. அதேநேரத்தில் இந்த பணியாளர்களுக்கு வேறு வேலைகள் வழங்கப்படுவது அல்லது வேறு நிறுவனங்களில் வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

செய்யறிவு தொழில்நுட்பத் துறையில் மிகவும் தீவிரமாக இருக்கும் நிறுவனங்களில் மெட்டாவும் ஒன்று. இந்த ஆண்டு 135 பில்லியன் டாலர் வரை செய்யறிவில் முதலீடு செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2028-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக மெட்டா 600 பில்லியன் டாலர் செலவிடும் என்று தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு, நிறுவனத்தின் பணி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் என்று அவர் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Meta cuts 700 jobs as it shifts focus to AI investment

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.