தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சந்திரசேகர் ராவ் மகள் கவிதா ஏப்.25-ல் புதிய கட்சி தொடக்கம்!

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சி தொடங்குவது குறித்து...

News image

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சி தொடக்கம்... - கோப்புப் படம் - ENS

Updated On :27 மார்ச் 2026, 12:39 pm

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா வரும் ஏப்ரல் 25 அன்று புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கடந்த 2025 ஆம் ஆண்டு அக்கட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகிய கவிதா விரைவில் புதிய கட்சியைத் தொடங்குவேன் என கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசிய கவிதா, வரும் ஏப்ரல் 25 அன்று முனீராபாதில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவை அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், இதுவரை ஆண்கள் தொடங்கிய கட்சிகள் மட்டுமே தெலங்கானாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்றும், தனது கட்சிக்கு பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினர் ஆதரவளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கவிதா அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Kavitha, the daughter of former Telangana CM Chandrashekar Rao, has announced that she will launch a new party on April 25.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.