பாஜகவுக்கு எதிரான தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை தனியொரு நபராக போராடி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று (மார்ச் 26) தெரிவித்தார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக பாஜக செய்துவரும் செயல்கள் குறித்து மாநிலத்தில் வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் (ஏப். 23, 29) நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தேர்தல் பிரசாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே புர்பா பரதமான் பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர்,
இப்போது அவர்கள் வசிக்கும் மாநிலத்தில் இறைச்சி சாப்பிடக் கூடாது, முட்டை சாப்பிடக் கூடாது, பெங்காலி பேசக் கூடாது என்று அவர்களிடம் சொல்லப்படுகிறது. மேலும், அவர்கள் பெங்காலி பேசினாலும், பவங்கதேசத்தினர்களாகவே கருதப்படுவார்கள்.
இதனால் கைது செய்யப்படுவார்கள், அங்கு தொல்லை செய்யப்பட்டு பின்னர் அவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். எந்தவொரு அரசியல் கட்சிகளும் இதற்கு எதிராகப் போராடவில்லை. தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை தனியொரு நபராகப் போராடி வருகிறேன். யாருடைய பெயர்கள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது. பாஜகவுக்கு தைரியம் இருந்தால் பட்டியலை வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
Summary
I alone fought from the streets to the court West Bengal CM Mamata Banerjee
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை வரவேற்கிறார் மமதா: அஸ்ஸாம் முதல்வர்
மே.வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது! - மமதா குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தை வென்றால் தில்லியையும் கைப்பற்றலாம்: மமதா உறுதி

மமதாவே அடுத்த பிரதமர்; பாஜக ஆட்சியில் கலவரம் வெடிக்கிறது! - திரிணமூல் எம்பி பேச்சு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



