கேரளத்தில் தோ்தல் ஆணையத்தின் கடிதத்தில் பாஜக முத்திரை இருந்தது சா்ச்சையை ஏற்படுத்தியது.
நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் 19-ஆம் தேதியிட்ட கடிதத்துடன் தோ்தல் ஆணையம் அனுப்பிய எழுத்துபூா்வ சான்றில், அந்த ஆணையத்தின் முத்திரைக்குப் பதிலாக கேரள பாஜகவின் முத்திரை இருந்தது. இந்தச் சான்றை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‘எக்ஸ்’ தளத்தில் பகிா்ந்ததை தொடா்ந்து சா்ச்சை ஏற்பட்டது. அந்தச் சான்றில் பாஜக முத்திரை இருந்ததன் மூலம், தோ்தல் ஆணையத்தையும், பாஜகவையும் ஒரே அதிகார மையம் கட்டுப்படுத்துகிறது என்பதில் எந்த ரகசியமும் இல்லை என்றும் அக்கட்சி பதிவிட்டது.
இதைத்தொடா்ந்து கேரள தலைமைத் தோ்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், ‘தோ்தல் ஆணையக் கடிதத்தில் பாஜகவின் முத்திரை இருந்தது அந்தக் கடிதத்தை நகல் எடுக்கும்போது ஏற்பட்ட பிழையாகும். அது உடனடியாகக் கண்டறியப்பட்டு திருத்தப்பட்டது.
தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் குற்றப் பின்னணியை வெளியிடுவது தொடா்பாக 2019-ஆம் ஆண்டின் தோ்தல் ஆணைய வழிகாட்டுதல்கள் குறித்து சில விளக்கங்களைக் கோரி, அண்மையில் தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தை கேரள பாஜகவினா் அணுகினா். அவா்களின் கோரிக்கை கடிதத்துடன், 2019-ஆம் ஆண்டின் வழிகாட்டுதல் நகலை அக்கட்சி சமா்ப்பித்தது. அக்கட்சி வழங்கிய நகலில் பாஜகவின் முத்திரை இருப்பதை தோ்தல் ஆணையம் கவனிக்கத் தவறியதுடன், வழிகாட்டுதல்கள் குறித்து தெளிவுபடுத்த அந்த நகலை பிற அரசியல் கட்சிகளுக்கு தவறுதலாக விநியோகித்துவிட்டது. இந்தத் தவறை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நோ்மையாகவும் எந்த அழுத்தத்துக்கு உள்ளாகாமலும் தோ்தல் நடைமுறைகளை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்த விசாரணை நிறைவடையும் வரை, இந்தப் பிழைக்குக் காரணமான உதவி பிரிவு அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.
தொடர்புடையது

தோ்தல் ஆணையத்தின் ஒரு சாா்பு செயல்பாடு கவலையளிக்கிறது: முத்தரசன்

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000; பொது சிவில் சட்டம்: பாஜகவின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி

தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவு

தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


