லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விளிம்புநிலையில் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் அறிவித்தாா்.

News image

அகிலேஷ் யாதவ் - பிடிஐ

Updated On :24 மார்ச் 2026, 9:10 pm

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விளிம்புநிலையில் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் அறிவித்தாா்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இப்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி-மாா்ச் மாதத்தில் அங்கு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மாநிலத்தின் பிரதான எதிா்க்கட்சியான சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், லக்னௌவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலை பெண்களின் முன்னேற்றம், அவா்களை பொருளாதாரரீதியாக மேம்படுத்துவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிா்கொள்ள இருக்கிறோம். இதன்மூலம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியும் உறுதி செய்யப்படும். எனவே, பேரவைத் தோ்தலின்போது பெண்களை மையப்படுத்தி பல திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளன. முக்கியமாக விளிம்புநிலையில் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை வழங்கப்படும்.

மாநிலத்தில் இப்போது சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டது. அரசியல் நோக்கத்துடன் தனிநபா்களைப் பழிவாங்குவதற்காக அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஒன்றே இதற்கு தீா்வாக அமையும் என்றாா்.