அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 88 வேட்பாளர்கள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக மார்ச் 19(இன்று) வெளியிட்டது.
ஜலுக்பாரி தொகுதியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா போட்டியிடுகிறார். திஸ்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளராக முன்னாள் காங்கிரஸ் தலைவர் பிரத்யுத் போர்டோலாவை அக்கட்சி அறிவித்துள்ளது.
முன்னதாக, புதன்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் ஹிமந்த சர்மா மற்றும் பிற கட்சித் தலைவர்கள் முன்னிலையில் போர்டோலாய் பாஜகவில் இணைந்தார்.
வேட்பாளர் பட்டியலின்படி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த பூபென் குமார் போரா பிஹ்புரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
பிர்சிங்-ஜாருவா தொகுதியில் மாதவி தாஸ், சமாரியா தொகுதியில் ஜோத்ஸ்னா கலிதா மற்றும் மங்கல்தாய் தொகுதியில் நீலிமா தேவி ஆகியோர் களமிறங்குகின்றனர்.
பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்களின் முதல் பட்டியலை இறுதி செய்தது. இக்கூட்டத்திற்குக் கட்சியின் தலைவர் நிதின் நவீன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா,பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேர்தல் குழுவின் பிற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
பாஜகவின் அஸ்ஸாம் மாநிலப் பிரிவுத் தலைவர் திலீப் சைகியாவும் இக்கூட்டத்தில் உடனிருந்தார்.
Summary
The BJP on Thursday released its first list of 88 candidates for the Assam assembly polls, including Chief Minister Himanta Biswa Sarma from Jalukbari seat.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடமையாற்றினார் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா!

ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும்: ஹிமந்த பிஸ்வ சர்மா!

பெண்களுக்கு மாதம் ரூ. 3,000.. இது அஸ்ஸாம் பாஜகவின் வாக்குறுதி!

கேரளத் தேர்தலில் களமிறங்கும் முன்னாள் அமைச்சர்கள்.. பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


