மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்த மமதா பானர்ஜி!

மேற்கு வங்கத்தில் 291 தொகுதிகளில் போட்டியிடவுள்ள திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது குறித்து....

News image

மமதா பானர்ஜி - பிடிஐ

Updated On :17 மார்ச் 2026, 2:22 pm

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மமதா பானர்ஜி இன்று (மார்ச் 17) அறிவித்தார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 மற்றும் 29 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரே கட்டமாக வேட்பாளர்களை மமதா பானர்ஜி களமிறக்கியுள்ளார்.

291 வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம் எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி மமதா பானர்ஜி தேர்தலை சந்திக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 13 மற்றும் 29 என இரு தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் 142 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி இன்று வெளியிட்டார்.

இதில், நட்சத்திர வேட்பாளர்களான சந்திரிமா பட்டாச்சார்யா டம் டம் உத்தர் தொகுதியிலும், மதன் மித்ரா கமர்ஹாத்தி, ஃபிர்ஹாத் ஹக்கீம் கொல்கத்தா துறைமுகம் தொகுதியிலும் குணால் கோஷ் பெலகாதா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தற்போது முதல்வராகவுள்ள மமதா பானர்ஜி, பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Summary

TMC announces names of candidates for 291 assembly seats Mamata Banerjee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.