புது தில்லி: பதிமூன்று ஆண்டுகளாக கோமாவில் சிகிச்சை பெற்றுவந்த 32 வயது இளைஞர் ஹரீஷ் ராணாவின் 32 வினாடி விடியோ ஒன்று நேற்று வெளியாகியிருந்தது.
அந்த விடியோவில், ராணாவுக்கு மருந்து வழங்கப்படுகிறது. அதனைக் கொடுக்கும் செவிலியர், அனைவரையும் மன்னித்துவிடுங்கள், அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கள். இப்போது செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது, சரியா? என மிகவும் சாந்தமான குரலில் ஹரீஷ் ராணாவிடம் சொல்கிறார். அவரது கண்கள் திறந்திருக்கின்றன. அறையில் பார்வை சுழல்கிறது. செவிலியரின் குரல் ஹரீஷ் ராணாவின் காதுகளில் கேட்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால், இதனைப் பார்ப்பவர்களின் மனம் சற்று கனக்கத்தான் செய்யும்.
உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத்தைச் சோ்ந்த பஞ்சாப் பல்கலைக்கழக மாணவரான ஹரீஷ் ராணா கடந்த 2013-ஆம் ஆண்டில் 4-ஆவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த 13 ஆண்டுகளாக அவா் கோமாவில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் ஹரீஷை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அவரின் பெற்றோா் ரிட் மனு தாக்கல் செய்தனா். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு அளிக்கும் சிகிச்சையை நிறுத்த அனுமதியளித்தது. இந்த விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுகுவது அவசியம். ஆதலால் சம்பந்தப்பட்ட நபரின் கண்ணியத்துக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் அவருக்கான சிகிச்சையை நிறுத்துவது தொடா்பான திட்டம் செயல்படுத்தப்படுவதை தில்லி எய்ம்ஸ் உறுதி செய்ய வேண்டும். கருணைக் கொலை தொடா்பான சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
நாட்டில், கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை.
ஹரீஷ் ராணாவுக்கு கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் வீட்டிலிருந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டார்.
அங்கு அவருக்கு கருணைக் கொலை செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. அவர் உயிருடன் இருக்கத் தேவையான மருத்துவ உதவிகள் மெல்ல அகற்றப்பட்டு, அவர் இயற்கையாகவே மரணமடைய தேவையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அவரை சிறப்பு மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ரோட்டரி புற்றுநோய் மருத்துவ மையத்தின் நோய்த்தணிப்புப் பராமரிப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். இங்குள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல துறை மருத்துவர்களும் கருணைக் கொலை செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குணப்படுத்த முடியாத நோயாளிகள் மற்றும் வலி நிவாரணிகளுடனே வாழ வேண்டியவர்களுக்கு, அவர்களது உயிர் காக்கும் கருவிகளை அகற்றிவிட்டு, மெல்ல அவர்கள் இயற்கையாகச் சாக வழிவிடும் ஒரு முறையே கருணைக் கொலை என்று மருத்துவமனை கூறுகிறது.
Summary
Harish Rana admitted to AIIMS for mercy killing.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!

கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு

13 ஆண்டுகள் கோமா! கருணைக் கொலைக்கு அனுமதி

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை ‘கருணைக் கொலை’ செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



