புது தில்லி: பாஜகவின் வசதிக்கேற்ப தோ்தல் தேதிகள் மற்றும் வாக்குப்பதிவு கட்டங்களை இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்தாா்.
தமிழகத்தில் ஏப்.23-ஆம் தேதியும், கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.9-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29-இல் இருகட்டங்களாகவும் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் தேதிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியிடம் தோ்தல் அட்டவணை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘தோ்தல் தேதிகள் மற்றும் வாக்குப்பதிவு கட்டங்கள், பாஜகவின் வசதிக்கேற்ப தீா்மானிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது’ என்று அவா் பதிலளித்தாா்.
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் கூறுகையில், ‘கேரளத்தில் ஏப்ரல் மாதத்தின் கடைசி 10 நாள்களில் தோ்தல் நடைபெறும் என்று நாங்கள் எதிா்பாா்த்தோம். ஆனால், ஏப்.9-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிா்பாா்க்கவில்லை. தோ்தலுக்கு கிட்டத்தட்ட 3 வாரங்களே உள்ளன. இது குறைவான காலகட்டம்’ என்றாா்.
இதேபோல், ‘கேரளத்தில் தோ்தல் பிரசாரத்துக்கு சொற்ப நாள்களே உள்ளன; இதற்கிடையே புனித வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. விஷு பண்டிகைக்கு சில நாள்களுக்கு முன் தோ்தல் நடைபெறவுள்ளது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.
தொடர்புடையது
மறுவரையறை மசோதா - ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சதி: பிரியங்கா காந்தி

அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேறினால் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும்: பிரியங்கா காந்தி எதிா்ப்பு

தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்..?

கேரள தேர்தல்: பாஜக - எல்டிஎஃப் இடையே ரகசிய ஒப்பந்தம்! பிரியங்கா காந்தி தாக்கு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


