தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிலிண்டர் தட்டுப்பாடு! முண்டியடித்து முன்பதிவு செய்ததால் நேர்ந்தது என்ன?

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக முண்டியடித்து முன்பதிவு செய்ததால் நேர்ந்த சம்பவங்கள் பற்றி..

News image

சிலிண்டர் தட்டுப்பாடு - கோப்புப் படம்

Updated On :16 மார்ச் 2026, 6:32 am

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை, மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று மத்திய அரசு மக்களுக்கு அறிவுறுத்தி வரும் அளவுக்கு கடந்த ஒரு வாரகாலமாக முன்பதிவு செய்ய மக்கள் அதிகத் தீவிரம் காட்டி வந்தனர்.

மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றா? அல்லது எல்லோருமே முன்பதிவு செய்துவிட்டதாலோவா தெரியவில்லை, கடந்த வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்தமாக சிலிண்டர் முன்பதிவு செய்தவர் எண்ணிக்கை 88.8 லட்சம்க இருந்த நிலையில், சனிக்கிழமை 77 லட்சமாகக் குறைந்தது. உண்மைக் காரணம் விரைவில் தெரியலாம்.

நாள்தோறும் ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக பெட்ரோலியம் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. சராசரியாக இது 84 சதவிகிதம் என இருந்த நிலையில் தற்போது 87 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. எங்குமே வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றாலும் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

ஆனால், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்ய முயன்றதால் இணையதளங்கள் முடங்கியிருப்பதாகவும், அதனால் மக்கள் ஆன்லைன் மூலமும் முன்பதிவு செய்ய முடியவில்லை என்ற அச்சத்தில் நேரடியாக எரிவாயு சிலிண்டர் அலுவலகங்களுக்கே காலி சிலிண்டர்களுடன் வந்து, உடனடியாக எரிவாயு நிரம்பிய சிலிண்டரைக் கேட்டு தகராறு செய்வதாகவும் கூறப்படுகிறது.

ஈரான் போர் காரணமாக ஏற்கனவே, வணிக சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளைப் பிறப்பித்திருப்பதால், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முதற்கட்டமாக, வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவுக்கு கால அவகாசத்தை மட்டுமே மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதுவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

About the incidents that occurred due to rush bookings due to fear of cylinder shortage.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.