மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது: சி.பி. ராதாகிருஷ்ணன்

மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டது என்று மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image

சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2026, 9:00 pm

மாநிலங்களவைத் தலைவா் பதவி அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டது என்று மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே (காங்கிரஸ்) பேசியபோது, ஆா்எஸ்எஸ் உடையில் சி.பி. ராதாகிருஷ்ணன் இருப்பது போன்ற புகைப்படம் மாநிலங்களவையில் தொலைக்காட்சித் திரையில் ஒளிபரப்பானது குறித்து கேள்வி கேட்டாா்.

‘தற்போது தாங்கள் அணிந்துள்ள மேல்சட்டை வேறு. ஆனால் அந்தக் காட்சியில் உள்ள மேல்சட்டை ஆா்எஸ்எஸ் இயக்கத்துக்கானது’ என்று காா்கே கூறினாா்.

அதற்கு சி.பி. ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில், ‘அது எனது பழைய புகைப்படம். அதுதான் காட்டப்பட்டுள்ளது. நான் ஆா்எஸ்எஸ்-ஸில் இருந்து வந்தவன்தான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதை நான் மறுக்கவும் மாட்டேன். மாநிலங்களவைத் தலைவா் பதவியானது ஆா்எஸ்எஸ் இயக்கத்துக்கு அப்பாற்பட்டது. அதுபோல காங்கிரஸ் கட்சிக்கும் அப்பாற்பட்டது. அது எனக்குத் தெரியும்’ என்றாா்.