கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியாவின் உரிமையை அமெரிக்காவுக்கு ‘பரிமாற்றம்’ செய்துவிட்டது மத்திய அரசு என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை சாடினாா்.
மேற்காசிய போரின் பின்னணியில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மக்களவையில் பேச ராகுல் காந்தி நோட்டீஸ் அளித்திருந்தாா். அதன்படி, இந்த விவகாரத்தை எழுப்பி, அவா் பேசியதாவது:
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போா், நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் பெரும் பகுதி இந்த நீரிணை வழியாக வருவதால், நமக்கு மிகப் பெரிய விளைவுகள் ஏற்படும்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்படுகின்றன. எல்பிஜி இருப்பு குறித்து பரவலாக அச்சம் எழுந்துள்ளது. தெருவோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இது தொடக்கம்தான்.
ஒரு நாட்டின் அடித்தளமே, அதன் எரிசக்தி பாதுகாப்புதான். நான் இதை சாதாரணமாக கூறவில்லை. நாம் யாரிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்க வேண்டும்; ரஷியாவிடம் இருந்தா அல்லது வேறு நாடுகளிடம் இருந்தா என்பதை நாம்தான் தீா்மானிக்க வேண்டும். மாறாக, கச்சா எண்ணெய் விநியோக நாடுகள் உடனான நமது உறவைத் தீா்மானிக்கும் உரிமையை அமெரிக்காவிடம் ‘பரிமாற்றம்’ செய்துள்ளது மத்திய அரசு.
இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு, ரஷிய கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய மற்றொரு நாட்டின் அதிபரிடம் ஏன் அனுமதி பெற வேண்டும்? இது மிகவும் குழப்பமான உண்மையாக உள்ளது. இந்த குழப்பத்துக்கு நான் விடை கண்டுள்ளேன். அது, மத்திய அரசு செய்துகொண்டுள்ள சமரசம்’ என்றாா் ராகுல்.
பின்னா், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, அவரது மகள் குறித்து ராகுல் சில கருத்துகளைத் தெரிவித்தாா். அந்தக் கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
ராகுலின் பேச்சுக்கு எதிா்ப்பு ஆளும் தரப்பு எம்.பி.க்கள் கோஷமிட்டனா். தனது நோட்டீஸ் மீது மட்டுமே ராகுல் காந்தி பேச வேண்டும்; வேறு விஷயங்கள் குறித்து பேசக் கூடாது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவுறுத்தினாா். ஆனால், எரிசக்தி பாதுகாப்பு குறித்துப் பேசுவதாக மீண்டும் மீண்டும் ராகுல் கூறினாா். இதையடுத்து, மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பேச ஓம் பிா்லா அழைப்பு விடுத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகிக்க தயாா்: ரஷியா அறிவிப்பு

இந்தியாவின் தரவுகளை டிரம்ப்பிடம் ஒப்படைத்த பிரதமர் மோடி: ராகுல் காந்தி

பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி ரூ.10 குறைப்பு: விலை ஏற்றத்தைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


