மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கேரளத்தில் காதலனை மணந்த கும்பமேளா நாயகி மோனலிசா! பாதுகாப்பு கேட்கிறார்!

கேரளத்தில் கும்பமேளா அழகு நட்சத்திரம் மோனலிசா காதலனை திருமணம் செய்துள்ளது குறித்து...

News image

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காதலனை கேரளத்தில் திருமணம் செய்தார் மேனலிசா... - எக்ஸ்

Updated On :11 மார்ச் 2026, 3:47 pm

கும்பமேளா மூலம் பிரபலமான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அழகு நட்சத்திரம் மோனலிசா, கேரளத்தில் தனது காதலனை திருமணம் செய்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞரை திருமணம் செய்வதற்கு தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில், கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மணிமாலை வியாபாரி மோனலிசா போஸ்லே அழகு நட்சத்திரமாக இணையத்தில் பிரபலமானார். இதையடுத்து, சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்தன.

இந்த நிலையில், முகநூலில் அறிமுகமான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஃபர்மான் (வயது 25) எனும் இளைஞரைக் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோனலிசா காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு மோனலிசாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரளத்தில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு வந்த மோனலிசாவை, அவரது தந்தை தன்னுடன் மத்தியப் பிரதேசத்திற்குத் திரும்புமாறு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், தந்தையுடன் செல்ல தனக்கு விருப்பமில்லை எனவும், தனக்கும் தனது காதலனுக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் திருவனந்தபுரத்தின் தம்பனூர் காவல் நிலையத்தில் மோனலிசா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, மோனலிசா 18 வயது நிரம்பியவர் என்பதை உறுதி செய்த காவல் துறையினர் அவரை முகமது ஃபர்மானுடன் செல்ல அனுமதித்துள்ளனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நெய்யடிங்கராவில் உள்ள அருமனூர் நாயனார் கோயிலில் மோனலிசா போஸ்லேவுக்கும் முகமது ஃபர்மானுக்கும் புதன்கிழமை (மார்ச் 11) மாலை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு பெரும் அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், ”இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மக்களும் இங்கு மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும்” என கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியுள்ளார்.

Summary

Monalisa, who became famous through the Kumbh Mela, has married her boyfriend in Kerala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.