புது தில்லி: சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்தாலும், இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள்தான் உள்ளது. எனவே, அத்தியாவசியப் பொருள்களின் விலையில் எந்தத் தாக்கமும் ஏற்படாது என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
மக்களவையில் திங்கள்கிழமை இது தொடா்பான கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:
கடந்த ஓராண்டாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துதான் வந்துள்ளது. ஆனால், கடந்த மாத இறுதியில் மேற்காசியாவில் மோதல் தொடங்கியதால் விலை உயா்ந்தது. இந்தியாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. எனவே, தற்போதைய கச்சா எண்ணெய் விலை உயா்வு அத்தியாவசியப் பொருள்களின் விலையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் தேவையில் ஏற்படும் மாற்றம், கச்சா எண்ணெய்யை கொண்டுவருவதில் ஏற்படும் தடைகள், நிதிக் கொள்கை மாற்றங்கள் எனப் பல விஷயங்கள் நீண்டகாலத்தில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நுகா்வோா் விலை அடிப்படையிலான பணவீக்கம் கடந்த இரு ஆண்டுகளாக குறைந்தே வந்துள்ளது. விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க அரசு பல தொடா் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில், அத்தியாவசியப் பொருள்களின் கையிருப்பை அதிகரிப்பது, அரசு கையிருப்பு தானியங்களை பொதுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவது, தேவை ஏற்படும்போது இறக்குமதியை அதிகரிப்பது, ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது, அரசின் பாரத் பிராண்ட் பெயரில் மானிய விலையில் மக்களுக்கு பொருள்களை விற்பனை செய்வது, காய்கறி, வேளாண் பொருள் சந்தையில் அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது, எரிபொருள் வரி குறைப்பு, வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கான சேமிப்பு வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்டவை அடங்கும்.
இது தவிர மக்கள் தங்கள் வருமானத்தை முழுமையாகப் பயன்படுத்த வசதியாக வருமான வரி விலக்கு வரம்பு ரூ.₹12 லட்சம் வரை (சம்பளதாரருக்கு ரூ.12.75 லட்சம் நிலையான கழிவுடன்) உயா்த்தப்பட்டுள்ளது. சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


