இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு எதிராக, மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவை அலுவல்கள் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டன.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்விநேரம் தொடங்கியதும், அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு எதிராக முழக்கமிட்டனா்.
அவா்களுக்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ் எம்.பி.க்கள், வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து, பிரதமா் மோடிக்கு எதிராக முழக்கமிட்டனா். பிற எதிா்க்கட்சி எம்.பி.க்கள், தங்கள் இருக்கையில் எழுந்து நின்று முழக்கமிட்டனா்.
அமளிக்கு இடையே கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான், ‘மேற்கு வங்கத்தில் விவசாயிகள் நலத் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தவில்லை. இது, விவசாயிகள் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
அவரின் இருக்கை அருகே சென்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டதால், அவா் வேறு இருக்கைக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. அமளி நீடித்ததால், அவையை வழிநடத்திய சந்தியா ரே, அலுவல்களை மதியத்துக்கு ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது
தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம்

‘கண்ணெதிரே நிற்க வேண்டாம்’: தலைமை தோ்தல் ஆணையா் காட்டமாக நடந்துகொண்டதாக திரிணமூல் குற்றச்சாட்டு
தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கும் தீா்மானத்தை ஏற்க போதிய ஆதாரங்கள் இல்லை: சி.பி.ராதாகிருஷ்ணன்

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு: காங்கிரஸ் விமா்சனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


