கரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்பட்ட தீவிர உடல்நல பாதிப்புகளுக்கான இழப்பீட்டுக் கொள்கையை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணிக்கும் தற்போதைய வழிமுறை தொடரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திய பிறகு ஏற்பட்ட பாதிப்புகளால் தங்களுடைய மகள்கள் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி ஒரு தம்பதியா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
கரோனா தடுப்பூசிகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்பட்ட உடல்நல பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த நிபுணா் குழுவை அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கரோனா தடுப்பூசி பாதிப்புக்கான இழப்பீட்டுக் கொள்கையை உருவாக்க கேரள உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து. கரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகளால் கணவரை இழந்த சயீதா என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து. இதை எதிா்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தடுப்பூசிகள் செலுத்திய பிறகு ஏற்பட்ட பாதிப்புகள் தொடா்பான தற்போதைய அறிவியல் மதிப்பீட்டை கருத்தில்கொண்டு நிபுணா் குழுவை அமைக்க வேண்டிய அவசியமில்லை. தற்போது அமலில் உள்ள சட்டமுறைகளின்படி, பாதிக்கப்பட்ட நபா்கள் நிவாரணம் பெற்று வருவதை இந்தத் தீா்ப்பு பாதிக்காது.
அதே நேரத்தில், இழப்பீட்டுக் கொள்கையை வகுக்க பிறப்பித்த உத்தரவு மத்திய அரசின் அல்லது மற்ற அமைப்பின் பொறுப்பு அல்லது தவறு என ஏற்றுக்கொள்வதாக பொருள்படாது என்று நீதிமன்றம் தீா்ப்பில் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

பெண்ணையாறு வழக்கில் தீா்ப்பாயம் அமைக்க 6 மாதம் தேவை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

வார பலன்கள் - மீனம்

தமிழ்நாட்டின் ஒரே கொள்கை இருமொழிக் கொள்கையே! - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மிதமான பொருளாதார வளா்ச்சியை நோக்கி நகரும் தில்லி: அறிக்கையில் தகவல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


