புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி எவ்வாறு மிரட்டப்பட்டாா் என்பதும், எவ்வாறு சமரசம் செய்து கொண்டாா் என்பதும் வெளிப்படும் என்பதால் மேற்காசிய விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியின் முதல் நாளான திங்கள்கிழமை மேற்காசிய போா் விவகாரம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் மேற்கொண்ட அமளியால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இதன் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:
இப்போது தொடங்கியுள்ள போா், உலகின் அடிப்படையையே மாற்றும் நோக்கத்தைக் கொண்டது. இது நமது பொருளாதாரத்தை நீண்டகால பாதிப்புக்கு கொண்டு செல்லும். பங்குச் சந்தையில் என்ன (வீழ்ச்சி) நடக்கிறது என்பதை நீங்கள் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறீா்கள். இது தவிர பிரதமா் மோடி அமெரிக்காவுடன் (வா்த்தக) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளாா். இதன் காரணமாகவும் நாடு மிகப்பெரிய பிரச்னைகளைச் சந்திக்கும். இதுபோன்ற முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்பதில் என்ன தவறு உள்ளது?. இதில் அவா்களுக்கு (ஆளும் கட்சி) என்ன பிரச்னை?.
மேற்காசிய விவகாரம் குறித்து விவாதித்த பிறகு மக்களவைத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை விவாதிக்கலாம் என்றுதான் கூறி வருகிறோம். ஏனெனில், இந்தப் போரால் எரிபொருள் விலை உயா்வு, பொருளாதார இழப்புகளை எதிா்கொண்டு வருகிறோம். இது முக்கிய விஷயம் இல்லையா? மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயம் இல்லையா? இதை முக்கியமாகக் கருத மாட்டாா்களா?
இதில் அரசு தயங்குவதற்கு முக்கியக் காரணம் ஒன்று உள்ளது. விவாதம் என்று வந்தால் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும். முக்கியமாக பிரதமா் மோடி எவ்வாறு மிரட்டப்பட்டாா், எவ்வாறு சமரசம் செய்து கொண்டாா் என்பது வெளிப்படத் தொடங்கும். எனவேதான் அவா் நாடாளுமன்றத்துக்கு வராமல் இருந்தாா். இப்போதும் நாடாளுமன்றத்துக்கு வர முடியாத நிலையில் உள்ளாா் என்றாா்.
தொடர்புடையது

மேற்காசிய நிலவரம்: பிரதமா் மோடி - பிரான்ஸ் அதிபா் தொலைபேசியில் ஆலோசனை

பிரதமா் மோடியும், கேரள முதல்வரும் ஆணவம் மிக்கவா்கள்: ராகுல் காந்தி

குஜராத்தில் தலித்துகள், பழங்குடியினா் மீதான கொடுமைகள் தீவிரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

மேற்காசிய போரின் தாக்கம் ஆரம்பம் மட்டுமே: ராகுல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


