மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு... மௌனம் கலைக்குமா பாஜக? டிகே சிவக்குமார் கேள்வி!

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக பாஜகவை விமர்சித்த கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார்.

News image

டி.கே. சிவக்குமார் (கோப்புப்படம்) - Photo: X / DK Shivakumar

Updated On :10 மார்ச் 2026, 10:57 am

இந்தியா முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ள நிலையில் பாஜகவினர் அதைப்பற்றி வாய்திறக்காமல் இருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், ”இந்த விவகாரத்தை அரசு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். இதுபற்றிப் பேச இன்று அவர்கள் அனுமதிக்க வேண்டும். சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னை மிகவும் மோசமாகி வருகிறது. நம்மிடம் போதிய கையிருப்பு இல்லை.

இப்போது, எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக பலரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பாஜக எம்பிக்கள் இதுபற்றி வாய் திறக்காமல் மௌனமாக உள்ளனர். அவர்கள் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கும் நேரத்தில் மற்ற பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது விநோதமாக உள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடா கர்நாடக தொடர்பான பல பிரச்னைகள் பற்றி பேசியுள்ளார். அவர் தனது கட்சி எம்பிக்களை எரிவாயு தட்டுப்பாடு பற்றி நாடாளுமன்றத்தில் பேசச் சொல்லவேண்டும்.

எல்பிஜி சிலிண்டர் விநியோகம் மற்றும் விலை நிர்ணயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த விவகாரத்திற்கு தேசிய அளவில் விரைந்து தீர்வு காணவேண்டும்” என்று டிகே சிவகுமார் கூறினார்.

Summary

Karnataka Deputy Chief Minister DK Shivakumar criticized the BJP over the gas cylinder shortage.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.