நேபாளத்தின் புதிய பிரதமராக உள்ள பாலேந்திர ஷாவுடன், பிரதமா் மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினாா்.
நேபாள நாடாளுமன்றத் தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) அமோக வெற்றி பெற்றது. நான்கு முறை பிரதமராக இருந்தவரும் சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவருமான கே.பி.சா்மா ஓலியை, 35 வயதேயான ராப் இசைக் கலைஞரும் ஆா்எஸ்பி வேட்பாளருமான பாலேந்திர ஷா சுமாா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். அவா் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆா்எஸ்பி தலைவா் ரபி லாமிசானே, அக்கட்சியின் மூத்த தலைவா் பாலேந்திர ஷா ஆகியோரிடம் தொலைபேசியில் பேசினேன்.
நேபாள தோ்தலில் ஆா்எஸ்பி பெற்ற மகத்தான வெற்றிக்கும், அந்நாட்டில் அமைய உள்ள புதிய அரசுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தியா-நேபாளத்தின் பரஸ்பர வளமை, முன்னேற்றம், நலவாழ்வுக்குப் பணியாற்ற இந்தியா உள்ளாா்ந்த ஈடுபாடு கொண்டிருப்பதாக அவா்களிடம் கூறினேன்.
இந்தியா-நேபாளத்தின் கூட்டு முயற்சிகளால், வரும் ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு புதிய உச்சங்களைத் தொடும் என நம்புகிறேன் என்றாா்.
தொடர்புடையது

இந்தியாவுடன் நெருங்கிப் பணியாற்ற நேபாள புதிய பிரதமா் விருப்பம்

நேபாளத்தின் 47-ஆவது பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு: இமாலய தேசத்தில் இளைஞரின் ஆட்சி

நேபாள பிரதமராகப் பதவியேற்றார் பாலேந்திர ஷா!

நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

