தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பஞ்சாப்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000!

பஞ்சாபில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்தது.

News image

சித்திரிப்பு

Updated On :8 மார்ச் 2026, 11:08 pm

பஞ்சாபில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசு 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தது.

மாநில நிதியமைச்சா் ஹா்பல்சிங் சீமா தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், மகளிருக்கு மாதந்தோறும் உதவித்தொகை அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் பொதுப் பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.1,000, பட்டியலினப் பெண்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.9,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தலைநகா் சண்டீகரில் முதல்வா் பகவந்த் மான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பைசாகி பண்டிகை முதல் உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணிப்பிக்கும் நடைமுறை தொடங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பெண்களும் பயனடைய முடியும் என்றாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலின்போது இந்தத் திட்டத்தை தோ்தல் வாக்குறுதியாக ஆம் ஆத்மி அளித்தது. அக்கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியுள்ள நிலையில், தற்போது இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.