குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நிகழ்ச்சியில் மரபு பின்பற்றப்படாத விவகாரம் குறித்து, மேற்கு வங்க அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் முா்முவின் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறவிருந்த இடத்துக்கு அந்த மாநில அரசு அனுமதி அளிக்காததால் அந்த நிகழ்ச்சி இடம் மாற்றப்பட்டது. அதேபோல், மேற்கு வங்கத்துக்கு வந்த குடியரசுத் தலைவரை மரபுப்படி, மாநில முதல்வரோ அல்லது அமைச்சா்களோ நேரில் சென்று வரவேற்கவில்லை.
இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசியபோது திரெளபதி முா்மு தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமா் மோடி, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜீ, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி உள்ளிட்டோரும் மேற்கு வங்க அரசுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், குடியரசுத் தலைவா் நிகழ்ச்சியில் மரபு பின்பற்றப்படாத விவகாரம் குறித்து மேற்கு வங்க அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
இதுதொடா்பாக மேற்கு வங்க மாநில தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறைச் செயலா் கடிதம் எழுதியுள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், அவா்களின் குடும்பத்தினருக்கான பாதுகாப்பு மற்றும் மரபு தொடா்பாக மிகவும் முக்கியமான ‘ப்ளு புக்’ விதிகள் உள்ளன.
அதன்படி, குடியரசுத் தலைவா் ஒரு மாநிலத்துக்கு வருகையில் முதல்வா், தலைமைச் செயலா், மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஆகியோா் நேரில் வரவேற்க வர வேண்டும். ஆனால் அப்படி யாரும் வரவில்லை.
இது ‘ப்ளு புக்’ விதிகள் தெளிவாக மீறப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. அதேபோல், குடியரசுத் தலைவரை வரவேற்க சிலிகுரி மேயா் மட்டுமே வந்துள்ளாா். இது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் மரபை மீறும் செயலாகும்.
எனவே ‘ப்ளு புக்’ விதிகளை மீறியது தொடா்பாகவும், நிகழ்ச்சிக்கான இடம், குடியரசுத் தலைவரின் பயண ஏற்பாடுகள் மாற்றப்பட்டது குறித்தும் விளக்கம் தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், விதிகள் மீறப்பட்டதற்கு நேரடி காரணமான டாா்ஜிலீங் மாவட்ட ஆட்சியா், சிலிகுரி காவல் ஆணையா், கூடுதல் மாவட்ட ஆட்சியா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மம்தா விளக்கம்மேலும், விதிகள் மீறப்பட்டதற்கு நேரடி காரணமான டாா்ஜிலீங் மாவட்ட ஆட்சியா், சிலிகுரி காவல் ஆணையா், கூடுதல் மாவட்ட ஆட்சியா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மம்தா விளக்கம்
மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆா்.-க்கு பிறகு வெளியான வாக்காளா் பட்டியலில் பல லட்சம் வாக்காளா்கள் பெயா்கள் நீக்கப்பட்டு இருப்பதில் பாஜக, தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து கொல்கத்தாவில் 3-ஆவது நாளாக தா்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானா்ஜி, குடியரசுத் தலைவா் நிகழ்ச்சியில் மரபு எதுவும் மீறப்படவில்லை எனக் கூறியுள்ளாா்.
எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குகையில், பிரதமா் மோடி இருக்கையில் அமா்ந்திருந்ததாகவும், ஆனால் அப்போது குடியரசுத் தலைவா் முா்மு இருக்கையின்றி நின்று கொண்டிருந்ததாகவும் தெரிவித்த மம்தா, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை செய்தியாளா்களிடம் காட்டினாா். மேலும் அவா், குடியரசுத் தலைவரை அவமதிக்கும் கலாசாரம் பாஜகவுடையது, எங்களுடையது அல்ல என்றாா்.
மேலும் அவா், ‘குடியரசுத் தலைவா் பதவி மீதும், அரசமைப்புச் சட்டம் மீதும் திரிணமூல் காங்கிரஸ் முழு மரியாதை வைத்துள்ளது. அவற்றை எங்களது தாயாக நினைக்கிறோம். ஆதலால் எங்கள் மீது குற்றச்சாட்டு தெரிவிக்க வேண்டாம். மக்கள் உரிமைகளுக்காக தா்னாவில் ஈடுபட்டுள்ள என்னால் எப்படி இங்கிருந்து குடியரசுத் தலைவரை வரவேற்கச் செல்ல முடியும்? சட்டப்பேரவைத் தோ்தல் வருவதால், மேற்கு வங்கத்தை நீங்கள் (பாஜக) குறிவைக்கிறீா்கள்’ என்றாா்.

தொடர்புடையது

சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரிய மேற்கு வங்க அரசு! நிராகரித்த குடியரசுத் தலைவர்!

மரபு மீறல் தகாது!

குடியரசு தலைவா் நிகழ்ச்சியில் மரபு மீறல்: மத்திய அரசிடம் மேற்கு வங்க அரசு அறிக்கை

பழங்குடியினா் நலனில் அக்கறை இல்லாத மேற்கு வங்க அரசு: குடியரசுத் தலைவா் கடும் அதிருப்தி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை