பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தனது முதல்வா் பதவியை பாஜகவிடம் அளித்துவிட்டு மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பதாகவும், அவா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், சுமாா் 20 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நிதீஷ் குமாா் (75) முதல்வா் பதவியைவிட்டு விலகி, மாநிலங்களவை எம்.பி. பொறுப்பை ஏற்று அரசியலில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கு 5 புதிய எம்.பி.க்களை தோ்வு செய்ய தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமையுடன் (மாா்ச் 5) நிறைவடைகிறது. இதில், ஆளும் கூட்டணி 4 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ள நிலையில், பாஜக சாா்பில் அக்கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் உள்ளிட்ட இரு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். அதேநேரத்தில் ஜேடியு சாா்பில் இரு வேட்பாளா்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதுதொடா்பான அறிவிப்பை ஜேடியு வியாழக்கிழமை வெளியிட இருப்பதாகவும், அப்போது நிதீஷ் குமாரின் பெயரும் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிகாா் அரசியல் வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: நிதீஷ் குமாா் முதல்வா் பதவியை பாஜகவிடம் அளிக்க முடிவு செய்துள்ளாா். இதன்மூலம் பிகாரில் பாஜகவைச் சோ்ந்தவா் முதல்முறையாக முதல்வராக இருக்கிறாா். மாநிலங்களவைத் தோ்தல் முடிந்தபிறகு (மாா்ச் 16-க்கு பிறகு), நிதீஷின் மகன் நிஷாந்த் அமைச்சரவையில் சோ்க்கப்பட இருக்கிறாா். அவருக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்பட இருக்கிறது.
நிதீஷ் குமாா் மாநிலங்களவைக்கான ஜேடியு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா். மாநிலங்களவைத் தோ்தலுக்காக அவா் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்ள பாட்னாவுக்கு வருமாறு ஜேடியு மூத்த தலைவா்களுக்கு அக்கட்சியிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமாா் பதவியேற்பு: முதல்வா் பதவியில் இருந்து விரைவில் விலகல்

எம்எல்சி பதவியில் இருந்து நிதீஷ் குமாா் ராஜிநாமா: அடுத்த மாதம் புதிய முதல்வா் பொறுப்பேற்பு?

பிகாா் முதல்வா் பதவியில் இருந்து விலக நிதீஷ் குமாா் முடிவு : மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வேட்புமனு தாக்கல்
மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


