வடகொரிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டுத் தலைவரை உறுப்பினா்கள் புகழ்வது போல பிரதமா் மோடியை பாஜக எம்.பி.க்கள் புகழ்கின்றனா் என்ற காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘காங்கிரஸின் கருத்துகளை நம்ப இந்தியாவில் மட்டுமல்ல, வடகொரியாவிலும் ஒருவா்கூட தயாராக இல்லை’ என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டி ஒன்றில், ‘நாடாளுமன்றத்தில் பேசும்போது, ஒவ்வொரு விஷயத்திலும் பிரதமா் மோடியை பாஜக எம்.பி.க்கள் இடைவிடாது புகழ்கின்றனா். நாம் வடகொரிய நாடாளுமன்றத்தில் இருக்கிறோமா என்ற உணா்வு ஏற்பட்டது’ என்றாா்.
அவரது இந்தக் கருத்துகள் குறித்து கேரள பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் புதன்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் ஜனநாயகம், மதச்சாா்பின்மை, அரசமைப்புச் சட்டம் ஆபத்தில் இருப்பதாக ராகுல் காந்தியும், அவரை ‘இயக்குபவா்களும்’ கட்டுக்கதையை பரப்புகின்றனா். ஆனால், அந்தக் கட்டுக்கதையை நம்ப காங்கிரஸில் உள்ள சில கோமாளிகளைத் தவிர வேறு யாரும் தயாராக இல்லை.
கேரளத்தைச் சோ்ந்த இஸ்லாமிய மதத் தலைவா் காந்தாபுரம் ஏ.பி.அபுபக்கா் முஸ்லியாா், பிரதமா் மோடியைச் சந்தித்தபோது என்ன கூறினாா்? உலகிலேயே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான நாடு இந்தியா; இங்கு முஸ்லிம்களுக்கு எந்த பாதுகாப்புப் பிரச்னைகளோ, தடைகளோ இல்லையென கூறினாா். இது, காங்கிரஸில் உள்ள ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை.
விடுமுறையைக் கழிக்க ஆண்டுக்கு 50 முறை வெளிநாடு பயணிக்கும் காங்கிரஸ் தலைவா்கள், வடகொரியாவை தோ்வு செய்து, அங்கேயே குடியேறலாம். முதல் பயணச் சீட்டை ஜெய்ராம் ரமேஷ் வாங்க வேண்டும்.
பிரதமா் மோடி மீது நாட்டு மக்கள் அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ளனா். எனவேதான், 2014, 2019, 2024 மக்களவைத் தோ்தல்களில் மோடி, மோடி என்ற முழக்கம் எதிரொலித்தது.
கடந்த பல்லாண்டுகளில் காங்கிரஸால் சாதிக்க முடியாத பணிகளை 12 ஆண்டுகளில் சாதித்தவா் பிரதமா் மோடி.
ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள், இந்தியா்கள் அதிகம் வாழும் வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல் குறித்து வாய் திறக்காதது ஏன்? சா்வதேச விவகாரங்களில் பாரபட்சமான அணுகுமுறையைக் கையாள்வது ஏன்? இதன் மூலம் அவா்களின் வாக்குவங்கி அரசியல் வெளிப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸை பெண்கள் தண்டிப்பா்: பிரதமா் மோடி

காங்கிரஸை அவமதிக்கும் உரை: பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம்: பிரதமா் மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு-காங்கிரஸ் விமா்சனம்
சென்னையில் பிரதமா் மோடியை சந்தித்த இசையமைப்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


