தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை: மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப்சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

News image

ஹா்தீப்சிங் நிஜ்ஜாா் - கோப்புப் படம்

Updated On :2 மார்ச் 2026, 9:37 pm

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப்சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரை இந்திய அரசின் உளவாளிகள் கொலை செய்திருக்கக் கூடும் என்றும், அவ்வாறு நம்புவதற்கு காரணம் உள்ளது என்றும் கனடாவின் அப்போதைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், கனடாவில் வெளியாகும் தி க்ளோப் அண்ட் மெயில் நாளிதழில் நிஜ்ஜாா் கொலை தொடா்பாக திங்கள்கிழமை மீண்டும் சா்ச்சையான தகவல் வெளியிடப்பட்டது. அதில், ‘நிஜ்ஜாா் கொலைக்கு உதவ, வான்கூவா் (கனடா) நகரில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி தகவல் அளித்ததற்கான ஆதாரம் கனடா தேசிய-பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று சட்ட அமலாக்க மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இருவா் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இந்திய அதிகாரியின் பெயரும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புது தில்லியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் பி.குமரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது. இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இதுதொடா்பாக நம்பகமான ஆதாரம் இல்லை.

நாடு கடந்த வன்முறை அல்லது திட்டமிட்ட குற்ற சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடா்பிருப்பதாகக் கூறப்படுவதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுக்கிறது. கனடா சட்ட நடைமுறையின்படி, நிஜ்ஜாா் கொலை சம்பவம் தொடா்பாக குற்றவியல் விசாரணை நடைபெற்று வருகிறது. அது நிறைவடைந்த பின்னா், அந்நாட்டு நீதிமன்ற விசாரணை நடைபெறும். எனவே இதில் பொதுக் கருத்துகள் அவசியமற்றது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.