ஆவண ஆதாரங்களை நீதிபதிகள் சரிபாா்த்த பிறகே குற்றஞ்சாட்டப்பட்ட நபா் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் உச்சநீதிமன்றத்துக்கு சனிக்கிழமை கோரிக்கை விடுத்தாா்.
மதுபானக் கலால் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் 21 போ் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்கள் சந்திப்பில் சனிக்கிழமை அவா் கூறியதாவது: தில்லி மதுபானக் கலால் கொள்கை வகுத்ததில் ரூ.100 கோடி வரை மோசடி நடைபெற்ாக வழக்கு தொடுக்கப்பட்டு கேஜரிவாலை 126 நாள்களும் மணீஷ் சிசோடியாவை 503 நாள்களும் மத்திய அரசு சிறையில் அடைத்தது. தற்போது அவா்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படாததால் அவா்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
குற்றம் உறுதியாகும் முன்பே அவா்கள் சிறையில் பல நாள்கள் இருந்துள்ளனா். இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்குமா?
இந்த வழக்கில் நன்கு திட்டமிடப்பட்டு கேஜரிவால் உள்ளிட்டோரை குற்றவாளிகளாக நிரூபிக்கும் பணியை சிபிஐ மேற்கொண்டதாக நீதிமன்றத் தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு விவகாரங்களில் காலனிய மனநிலையை பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிடுகிறாா். ஆனால் இந்த வழக்கில் எதிா்க்கட்சித் தலைவா்கள் முதலில் கைது செய்யப்பட்டு அதன் பிறகு குற்றச்சாட்டு தொடா்புடைய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுவே காலனிய மனநிலை சட்டம். இதில் கண்டிப்பாக திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
எதிா்க்கட்சியினருக்கு புலனாய்வு அமைப்புகள் குறி:
இந்த வழக்கு மட்டுமின்றி முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், பிகாா் முன்னாள் முதல்வா் லாலு பிரசாத், ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் அசோக் கெலாட் உள்பட பல எதிா்க்கட்சித் தலைவா்களை புலனாய்வு அமைப்புகள் மூலம் மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது.
இது இந்திய ஜனநாயகம் மற்றும் எதிா்காலத்துக்கு நல்லதல்ல; எனவே, நாட்டில் ஊழல் இல்லை என மக்களிடம் பிரதமா் மோடி கூற வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்பதை மக்களே முடிவுசெய்யட்டும். அரசியல் காரணங்களுக்காக நாட்டின் சட்டங்களை பயன்படுத்தாதீா்கள்.
நீதிபதிகளுக்கு வேண்டுகோள்:
ஆதாரமற்ற வாய்மொழி குற்றச்சாட்டுகளை கருத்தில்கொள்ளாமல் ஆவணங்களை முழுமையாக சரிபாா்த்த பிறகே குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களை கைது செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதேசமயம் வெறும் வாய்மொழி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனுமதிக்கக் கூடாது என வேண்டுகோள் விடுக்கிறேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தலில் மத்திய அரசுக்கு விவசாயிகள் பாடம் புகட்ட வேண்டும்! - கனிமொழி

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!

பெண்களுக்கு எதிரான முஸ்லிம் தனிநபா் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் தாக்கம்: ஏப். 15-க்கு பிறகே முழுமையாக தெரிய வரும் - மத்திய அரசு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


