ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மீண்டுமொரு வினாத்தாள் கசிவு: மகாராஷ்டிர ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு

மகாராஷ்டிரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து...

Maharashtra TET 2026 exam postponed

ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு - பிரதிப் படம்

Published On :27 ஜூன் 2026, 3:42 pm IST

மகாராஷ்டிரத்தில் நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஞாயிற்றுக்கிழமையில் (ஜூன் 28) 1,028 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக காவல்துறையினருக்கு இன்று அதிகாலையில் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, தாணேவில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வினாத்தாளின் சில பகுதிகள் கசிவு உறுதிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக பலரும் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நாளை தேர்வு நடைபெறவிருந்த நிலையில், தேர்வுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக தேர்வின் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலத்தில் நாளை நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பணிபுரியும் ஆசிரியர்கள் உள்பட 4.28 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Maharashtra TET 2026 exam postponed a day before test over paper leak

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.