மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய சட்டம் 2006 ஆகியவற்றின் கீழான பல சிறிய மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான விதி மீறல்களுக்கான தண்டனையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
அதேநேரம், பொதுமக்களின் உடல் நலனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான விதி மீறல்கள் மற்றும் குற்றங்களுக்கான கடுமையான தண்டனைகளை தொடர வகை செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் நிறுவனங்கள் செய்யும் சிறு குற்றங்களுக்காக விதிக்கப்படும் சிறைத் தண்டனைகளை அபராதங்களாக குறைபதற்காக மத்திய அரசு கொண்டுவந்த ‘மக்கள் நம்பிக்கை சட்டம்’ என்ற சீா்திருத்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் நம்பிக்கை சட்டத்தின் அடிப்படையில், உணவு, மருந்துகள் மற்றும் அழகுசாதனங்கள் வா்த்தகத்தில் குறிப்பிட்ட தொழில்நுட்ப ரீதியிலான மற்றும் நடைமுறை விதி மீறல்களுக்கு முன்னா் மேற்கொள்ளப்படும் குற்றவியல் நடவடிக்கை நடைமுறைகள் தற்போது நிா்வாக ரீதியில் தீா்வு காணும் நடைமுறையாக மாற்றி திருத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக, ஏதேனும் ஒரு மருந்து அல்லது அழகுசாதனப் பொருளை விளம்பரப்படுத்துவதற்கு அரசு ஆய்வாளரின் அறிக்கையைப் பயன்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்த மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் 29-ஆவது பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
அதுபோல, குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அழகுசாதன பொருள்கள் உற்பத்தி அல்லது விற்பனை, தரத்தில் சிறிய அளவில் குறைபாடு, குறியீடுகள் அல்லது அடையாளமிடலில் குறைபாடுகள் உள்ளிட்ட விதி மீறல்கள், நிா்வாக ரீதியில் தீா்வு காணும் வகையிலான நடைமுறையாக மாற்றப்பட்டுள்ளது. விற்பனை பதிவுகள் பராமரிப்பு, தகவல் சமா்ப்பிப்பு தொடா்பான விதி மீறல்கள், உணவு பாதுகாப்பு அலுவலருக்கு எதிரான தவறான புகாா்கள் மீதான குற்றவியல் நடைமுறைகளும், தற்போது நிா்வாக ரீதியில் தீா்வு காணும் நடைமுறையாக மாற்றப்பட்டுள்ளது.
அதே நேரம், நுகா்வேரின் பாதுகாப்பை நேரடியாக பாதிக்கக்கூடிய கலப்பட அழகுசாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு விதிக்கப்படும் கடுமையான தண்டனை நடைமுறைகள் இச் சட்டத்தின் கீழ் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்றங்களுக்கான சிறைத் தண்டனை 6 மாதங்களிலிருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தினமணி செய்தி எதிரொலி... 11 உணவகங்களுக்கு ரூ. 10,000 அபராதம்

மருத்துவ நிறுவனச் சட்டத் திருத்தங்கள் அறிவிக்கை: நடைமுறை மீறல்களுக்கான தண்டனை குறைப்பு

தில்லி சுகாதாரத் துறையில் ஊழல்: முன்னாள் அரசு அதிகாரி கைது

சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




