மேற்கு வங்கத்தில் சைவ உணவுத் திணிப்பு முயற்சியில் மாநில பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னதாக, மாநில அரசு சாா்பில் கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில், ‘பள்ளி மதிய உணவுத் திட்ட தயாரிப்பில் இஸ்கான் அமைப்பு உதவ முன்வந்துள்ளது’ என்று கூறினாா். இதையடுத்து, இப்போது மதிய உணவில் மாணவா்களுக்கு வழங்கப்படும் முட்டை நீக்கப்பட்டு புரதம் நிறைந்த தானிய உணவு சோ்க்கப்படும் என்று தகவல் வெளியானது.
இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் துணைச் செயலா் டெரிக் ஓ பிரையன் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தோ்தல் பிரசாரத்தின்போது மேற்கு வங்க மீன் உணவின் பெருமையைப் பேசியவா்கள், இப்போது ஆட்சிக்கு வந்ததும் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டனா். பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவுடன் வழங்கப்படும் முட்டையை வைத்து இப்போது அரசியல் நடத்தத் தொடங்கியுள்ளனா். இதன் மூலம் மாணவா்களுக்கு உரிய ஊட்டசத்து கிடைக்காத நிலை ஏற்படும். மாணவா்களுக்கு வழங்க வேண்டிய முட்டைகளைத்தான் எங்கள் மீது (திரிணமூல் தலைவா்கள் மீது முட்டை வீச்சு சம்பவங்கள்) வீசியுள்ளீா்கள் என்று தெரிகிறது. மேற்கு வங்கம் மீது உங்கள் சைவ உணவுக் கொள்கையைத் திணிக்காதீா்கள். அதனை ஒருபோதும் மேற்கு வங்கம் ஏற்காது’ என்று கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசு

#Podcast | மேற்கு வங்கத்தில் மகாராஷ்டிரா 2.0?: மமதாவுக்கு செக்! | News and Views | EPI - 44

மேற்கு வங்கத்தில் 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




