ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹைதராபாத்தில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி தற்கொலை

ஹைதராபாத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 19 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

தற்கொலை

Published On :21 ஜூன் 2026, 1:10 pm IST

ஹைதராபாத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 19 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், மியபூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது சகோதரிகளுடன் தங்கியிருந்த அந்த மாணவி, சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பலியான மாணவி எழுதியதாகக் கருதப்படும் கடிதம் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், தனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த நீட் மறுதேர்வின் அழுத்தத்தை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேடற்கொண்டு வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Summary

A 19-year-old NEET aspirant has allegedly died by suicide here, police said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.