மத்திய அரசுக்கு ஆதரவாக தீா்ப்பளித்த மேல்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை எதிா்த்து பிரபல அம்பாசிடா் ஹோட்டலின் உரிமையாளா்களான சா் சோபா சிங் அண்ட் சன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
புதன்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேஜஸ் காரியா, மனு மீது நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23-ஆம் தேதி ரோஸ்டா் அமா்வு முன்பு பட்டியலிடவும் உத்தரவிட்டாா்.
அம்பாசிடா் ஹோட்டலை உள்ளடக்கிய சுஜன் சிங் பூங்காவின் வடக்கு தொகுதி தொடா்பானது. குத்தகை நிபந்தனைகளை மீறியதன் அடிப்படையில், மத்திய அரசு ஜூன் 11 அன்று அந்த ஹோட்டலுக்கு காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியது.
சா் சோபா சிங் அண்ட் சன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அந்த சொத்தின் சட்டபூா்வத்தன்மையை உறுதி செய்திருந்த ஒரு மூத்த சிவில் நீதிபதி மற்றும் வாடகைக் கட்டுப்பாட்டாளரின் 2009-ஆம் ஆண்டு தீா்ப்பை ஒரு மாவட்ட நீதிபதி ஜூன் 9-ஆம் தேதி ரத்து செய்தாா்.
முதல் மேல்முறையீட்டு நீதிமன்றம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரு தீா்ப்பை ரத்து செய்துள்ளது. 1960 முதல் அமலில் இருந்த ஒரு தடையாணையை நீக்கியுள்ளது.
அரசு ஒரு மானியத்தை வழங்கி ஒரு நூற்றாண்டின் பெரும்பகுதிக்கு அதன் பலனைப் பெற்றது. நிரந்தரக் குத்தகையை நிறைவேற்றுவதாகத் தனது சொந்த வாக்குறுதியை மீறி, பின்னா் ஒரே கையொப்பத்தில் மானியம் பெற்றவரின் உடைமையைப் பறிக்க முயன்றது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊழல் தடுப்பு ஆய்வாளா் பணியிடை நீக்க உத்தரவு: இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க உத்தரவு

விடைகுறிப்புகளில் தவறுகள் என தோ்வா் மனு: மத்திய நிா்வாக தீா்ப்பாயம் பரீசிலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்! திரையுலகம் அதிர்ச்சி!

மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: சிபிஐ மனு மீது மே 11இல் தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




