கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் பொறுப்பேற்ற பின் நடைபெற்ற சட்டமேலவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
கர்நாடகத்தில் 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், காங்கிரஸுக்கு 138 எம்.எல்.ஏக்களும், பாஜகவுக்கு 66 எம்.எல்.ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 3 எம்.எல்.ஏக்களும், சுயேச்சை இருவரும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா, சர்வோதயா கர்நாடக பக்ஷா தலா ஒரு எம்.எல்.ஏ-வும் உள்ளனர்.
கர்நாடகத்தில் உள்ள 7 சட்டமேலவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஏழு தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டில் வெற்றி பெற்றது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஒரேயொரு வேட்பாளரான கோவிந்தராஜு தோல்வியைச் சந்தித்தார்.
138 வாக்குகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, மாற்றுக் கட்சியினரின் ஆதரவுடன் 151 வாக்குகளைப் பெற்றது. இதனால், 5 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பி.கே.ஹரிபிரசாத், திப்பண்ணனப்பா கமகனூர், பி.வி.மோகன், சிவண்ணா மலவள்ளி, வினய் கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அதே வேளையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் 18 எம்.எல்.ஏக்களில் 14 பேர் மட்டுமே கட்சிக்கு வாக்குகளை செலுத்தியுள்ளனர். மற்ற நால்வரும் கட்சி மாறி காங்கிரஸுக்கு ஆதரவளித்துள்ளனர்.
Summary
In his first electoral test as Karnataka Chief Minister, DK Shivakumar secured a major victory as the Congress won five of the seven Legislative Council seats that went to polls on Thursday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் எதிர்கொள்ளும் சவால்கள்!

அமைச்சர்களுக்குத் துறை ஒதுக்குவது கட்சித் தலைமையின் முடிவு! - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேச்சு!

கர்நாடகத்தின் புதிய துணை முதல்வர் யார்? காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் போட்டி!







