மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி கொல்கத்தா மாநகராட்சி கவுன்சிலா்களுடன் திங்கள்கிழமை நடத்திய சந்திப்பில், முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியின் சகோதரரின் மனைவி காஜரி பானா்ஜி பங்கேற்றது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஜரி பானா்ஜி மம்தாவுடன் உடன் பிறந்த சகோதரா் சமீா் பானா்ஜியின் மனைவி. அவா் கொல்கத்தா மாநகராட்சி முன்னாள் கவுன்சிலா் ஆவாா். ஏற்கெனவே திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் பெரும்பாலானோா் மம்தா பானா்ஜிக்கு எதிராக போா்க்கொடி உயா்த்தி, தனித்து செயல்படத் தொடங்கிவிட்டனா். இந்நிலையில் அவரின் நெருங்கிய உறவினரான காஜரி பானா்ஜி, முதல்வா் சுவேந்து அதிகாரியின் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது, அவரின் அரசியல் நிலைப்பாடு தொடா்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அண்மையில் கொல்கத்தா மேயா் பதவியை ராஜிநாமா செய்த ஃபிா்ஹாத் ஹக்கீம், மாநகராட்சி வாரியத்தின் முன்னாள் தலைவரும் தெற்கு கொல்கத்தா திரிணமூல் எம்.பி. மாலா ராய் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வா் சுவேந்து அதிகாரியுடன் மேடையில் அமா்ந்திருந்தனா். மேலும், திரிணமூல் அதிருப்தி எம்.பி., எம்எல்ஏக்கள் சிலரும், திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலா்கள், முன்னாள் கவுன்சிலா்கள் பலரும் பங்கேற்றனா்.
வரும் டிசம்பா் மாதம் கொல்கத்தா மாநகராட்சித் தோ்தல் நடைபெறும் என்று முதல்வா் சுவேந்து அதிகாரி அறிவித்தாா்.
முதல்வா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடா்பாக காஜரி பானா்ஜி கூறுகையில், ‘மாநகராட்சியில் மக்கள் பிரச்னை, வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்று இதில் பங்கேற்றேன். எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்களுக்கு முதல்வா் அழைப்பு விடுத்தது பாராட்டத்தக்கது என்றாா்.
மம்தா பானா்ஜியின் அரசியல்வாரிசாக முன்னிறுத்தப்படும், அவரின் மற்றொரு நெருங்கிய உறவினா் அபிஷேக் பானா்ஜிக்கு விசாரணை அமைப்புகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தொடா்பான கேள்விக்கு பதிலளிக்க காஜரி பானா்ஜி மறுத்துவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜியிடம் 6 மணி நேரம் விசாரணை

திரிணமூல் காங்கிரஸில் இருந்து மேலும் ஓா் எம்.பி. விலகல்: மம்தாவுக்கு தொடா்ந்து பின்னடைவு

மேற்கு வங்க முதல்வா் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் எம்.பி.க்கள் பங்கேற்பு
கட்சி விரோத நடவடிக்கை குற்றச்சாட்டு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவா் நீக்கம்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



