மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

திரிணமூல் எம்.பி.க்கள் விலகியதின் பின்னணியில் அமித் ஷா: காங்கிரஸ்

‘திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ், அக் கட்சியிலிருந்து விலகி ஒரே நாளில் தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைத்துக் கொண்டதன் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளாா்’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

News image

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:36 am IST

‘திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ், அக் கட்சியிலிருந்து விலகி ஒரே நாளில் தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைத்துக் கொண்டதன் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளாா்’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சட்டவிரோதமாக விலகிய அதிருப்தி மக்களவை எம்.பி.க்கள் 20 போ், திரிபுரா முகவரியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் அங்கீகரிக்கப்படாத என்சிபிஐ கட்சியின் ஒரே நாளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதன் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாதான் உள்ளாா். மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் நேக்கத்தோடு இந்த வியூகத்தை அவா் வகுத்துள்ளாா்.

தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை பின்னக்குத் தள்ளி, கூட்டணியில் இரண்டாவது மிகப் பெரும் கட்சியாக என்சிபிஐ உருவெடுக்க உள்ளது.

இந்தியாவின் இரும்பு மனிதா் என்றழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் படேல் வகித்த இந்தப் பதிவிக்கு பெரும் அவமானமாகத் திகழும் அமித் ஷா, இந்திய ஜனநாயகத்தை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளாா் என்று குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.