வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அகோரியைப் போன்றவர் மோடி: சிவசேனைத் தலைவர் சர்ச்சை பேச்சு!

சிவசேனை (யுபிடி) கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தது பற்றி...

News image

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 8:37 pm IST

சிவசேனை (யுபிடி) கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் பிரதமர் நரேந்திர மோடியை அகோரி என்று விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான சஞ்சய் ராவத், சிவசேனை (யுபிடி) கட்சியின் மாநிலங்களவை எம்பியாக உள்ளார்.

இவர் புனேயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசுகையில், “நம் நாட்டின் அரசியலில் இப்படி ஒரு அகோரியைப் போன்ற நபரை இதுவரை நான் பார்த்ததில்லை. இவ்வளவு கொடூரமான ஒருவரும் இதற்கு முன் இருந்ததில்லை. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, பி.வி. நரசிம்ம ராவ், ராஜீவ் காந்தி, பாபாசாஹேப் அம்பேத்கர், பாலாசாஹேப் தாக்கரே போன்ற சிறந்த தலைவர்களை நம் நாடு உருவாக்கியுள்ளது.

ஆனால், மோடியின் ஒட்டுமொத்த குணத்தைப் பார்க்கையில் ஒரு அச்சம் உருவாகிறது. இப்படிப்பட்ட ஒருவர் எங்கிருந்து வந்தார்? ஔரங்கசீப்பை உருவாக்கிய அதே குஜராத் மண்ணில் இருந்து மோடியும் வந்துள்ளார்” என்று பேசினார்.

சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத் - (கோப்புப்படம்)

இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாகப் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, ”எதிர்க்கட்சியினர் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். அவர்கள் தற்போது பிரதமர் மோடியையும், அரசியலமைப்புப் பதவியையும் மட்டுமின்றி ஒட்டுமொத்த குஜராத்தையும் அவமதிக்கத் தொடங்கிவிட்டனர். காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடந்த காலங்களில் தொடர்ந்து பிரதமருக்கு எதிராக இழிவாகப் பேசி வந்தனர்.

ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு எதிராக மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இப்போது, ​​காங்கிரஸின் கூட்டாளியான சஞ்சய் ராவத் பிரதமருக்கு எதிராக கடுமையாகப் பேசியுள்ளார். ராவத் ஒரு படி மேலே சென்று, குஜராத்தை ஔரங்கசீப்பின் பூமி என்று அவமதித்துள்ளார். இதுவே அவர்களின் மனநிலை” எனப் பேசியுள்ளார்.

பாஜக தலைவர்கள் பலரும் சஞ்சய் ராவத் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Modi is like an Aghori: Shiv Sena leader's controversial remarks!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.