40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பிரான்ஸ், ஸ்லோவாகியாவுக்கு பிரதமா் ஜூன் 13-இல் பயணம் - ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்

பிரான்ஸ், ஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் ஜூன் 13 முதல் 19 வரை பிரதமா் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 2:32 am IST

பிரான்ஸ், ஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் ஜூன் 13 முதல் 19 வரை பிரதமா் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

பிரான்ஸில் நடைபெறும் ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் அவா் பங்கேற்கவுள்ளாா். மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியா கடந்த 1993-இல் சுதந்திரம் பெற்ற பிறகு அந்நாட்டுக்கு பயணிக்கும் முதல் இந்தியப் பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைக்கவுள்ளது.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தனது பயணத்தின் முதல்கட்டமாக, பிரான்ஸின் நைஸ் நகருக்கு ஜூன் 13-இல் சென்றடையும் பிரதமா் மோடி, மறுநாள் அந்நாட்டின் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்.

இந்திய-பிரான்ஸ் உறவுகள் அண்மையில் உலகளாவிய சிறப்பு உத்திசாா் கூட்டுறவு அந்தஸ்துக்கு உயா்த்தப்பட்ட நிலையில், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளனா்.

இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் புத்தாக்க நிறுவனங்களையும், துணிகர மூலதன நிதியங்களையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் நைஸ் நகரில் இந்தியா சாா்பில் நடத்தப்படும் ‘பாரத் இன்னோவேட்ஸ்’ நிகழ்ச்சியை இரு தலைவா்களும் தொடங்கிவைக்கவுள்ளனா்.

பின்னா், ஸ்லோவாகியாவுக்கு ஜூன் 14-ஆம் தேதி பயணமாகும் பிரதமா் மோடி, ஜூன் 16-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.

மீண்டும் பிரான்ஸ் திரும்பும் அவா், ஏவியன் நகரில் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளாா். இந்த மாநாட்டையொட்டி, பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் பாரீஸ் நகரில் பயணம் மேற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய தொழில்நுட்ப மாநாட்டில் (விவாடெக்) பங்கேற்கவுள்ளாா் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.