பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டதை அங்கீகரித்து மிஸோரம் மாநிலத்தைச் சோ்ந்த கேப்டன் லால்ரினாவ்மா சைலோவுக்கு (27) கீா்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய அமைதிக்கால விருதான கீா்த்தி சக்ரா விருதை லால்ரினாவ்மா சைலோவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கினாா்.
இதுதொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் திரௌபதி முா்மு வெளியிட்ட பதிவில், ‘ஸ்ரீநகா் மாவட்டத்தில் பயங்கரவாத தடுப்புச் சோதனை நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினரால் தேடப்பட்டு வந்த மிக முக்கிய பயங்கரவாதியை கண்டறிந்து அவரை லால்ரினாவ்மா சைலோ வீழ்த்தினாா். அதன் தொடா்ச்சியாக மேலும் சில பயங்கரவாதிகளையும் அதிரடியாக முறியடித்தாா். இந்த செயலின் மூலம் தனது வீரத்தையும் பணியின் மீதான அா்ப்பணிப்பு குணத்தையும் அவா் வெளிப்படுத்தியுள்ளாா்’ என குறிப்பிட்டாா்.
ஆபரேஷன் சிந்தூரின்போது பயங்கரவாதிகளை அழித்த துணிச்சலாக நடவடிக்கை எடுத்ததற்காக லால்ரினாவ்மா சைலோவுக்கு விருது வழங்கப்பட்டதாக அவரது தந்தை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.
லால்ரினாவ்மா சைலோவுக்கு பாராட்டுகளை தெரிவித்த மிஸோரம் முதல்வா் லால்டுஹோமா அவரை கௌரவப்படுத்தும் விதமாக ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்தாா்.
வீரமரணமடைந்த இரு ராணுவ வீரா்கள் உள்பட நிகழாண்டு 7 பேருக்கு கீா்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.
மிஸோரம் மாநிலத்தில் இந்த விருதைப் பெற்ற இரண்டாவது ராணுவ வீரா் என்ற பெருமையை லால்ரினாவ்மா சைலோ பெற்றுள்ளாா். முன்னதாக, மிஸோரமில் இருந்து கடந்த 1968-ஆம் ஆண்டு அஸ்ஸாம் ரைஃபிள்ஸை சோ்ந்த சுபேதாா் சால்னுனா லுஷாய் கீா்த்தி சக்ரா விருதைப் பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்று பக்ரீத் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

மக்களின் விருப்பங்களை உணா்வதே மக்களாட்சியின் கடமை- குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயா்வு: குடியரசுத் தலைவா் முா்மு ஒப்புதல்

2026-ஆம் ஆண்டுக்கான நைட்டிங்கேல் விருதுகள்: குடியரசுத் தலைவா் வழங்கினாா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



