தலைநகர் புது தில்லியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இந்த பேனர்களை யார் வைத்திருப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி மற்றும் இண்டி கூட்டணி பற்றி, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் உதயநிதி, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் தலைவருமான மமதா பேனர்ஜி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத் பவார் ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசிய வாசகங்கள் அடங்கிய பேனர்கள் தலைவர்களின் புகைப்படங்களுடன் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுக பேசி வரும் நிலையில், அவர்கள் தரப்பில் பேனர் வைக்கப்பட்டிருக்கலாமா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆனால், கூட்டணியில் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்பவர்கள் எவ்வாறு ஒற்றிணைந்து போராடுவார்கள் என்ற வாசகம் அடங்கிய பேனரால், இந்த பேனர்களை வைத்தது யாராக இருக்கும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இண்டி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம், புது தில்லியில் இன்று பகல் 12 மணியளவில் தொடங்கி நடைபெறவிருக்கும் நிலையில், புது தில்லி முழுக்க ஹிந்தியில் வைக்கப்பட்டிருக்கும் இந்த பேனர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்து தற்போது ஆளும் தவெகவுடன் இணைந்து கொண்ட காங்கிரஸ் கட்சியை, திமுக தலைவர்கள் கடுமையாக விமரிசித்து வருகிறார்கள். மேலும், இண்டி கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்று திமுகவும் அறிவித்துவிட்டது. இந்த நிலையில், உதயநிதி படத்துடன் அவர் காங்கிரஸ் கட்சியை விமர்சித்த வாசகங்கள் ஹிந்தியில் எழுதப்பட்டு, ராகுல் மற்றும் உதயநிதியின் புகைப்படங்களும் பேனரில் இடம்பெற்றுள்ளன.
அதாவது, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது முதுகில் குத்திவிட்டுச் சென்றதாக உதயநிதி கூறியதாக ஒரு பேனர் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒருவருக்கொருவர் எதிரான மனநிலையைக் கொண்டவர்கள் என்ற வாசகம் அடங்கிய பேனர்களும் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் முதல்வர்கள் பினராயி விஜயன், கேஜரிவால் உள்ளிட்டோர், ராகுல் குறித்து விமர்சித்த வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இண்டி கூட்டணியின் நிலை இதுதான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மமதா பேனர்ஜி, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தாலும், மேற்கு வங்கத்தில் தோல்வியடைந்த நிலையில், தற்போது நடைபெறும் இண்டி கூட்டணியில் அவர் பங்கேற்கப்போவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
Summary
Who put up banners against Rahul and Congress party in Delhi?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஹிந்தி பேனர்கள் வைத்தது திமுக! முரசொலி செய்தி

ராகுலை விஜய் சந்திக்காதது ஏன்? காங்கிரஸ் எம்.பி. விளக்கம்
அநீதிக்கு எதிராக முஸ்லிம்கள் குரலெழுப்ப வேண்டும்: ராகுல் காந்தி

மே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



