40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு!

இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் பற்றி...

News image

தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது - Congress / X

Updated On :8 ஜூன் 2026, 12:19 pm IST

தில்லியில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தில்லி கான்ஸ்டிடூஷன் கிளப்பில் நடைபெற்று வரும் கூட்டத்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மமதா பானா்ஜி, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃப்ரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே இணையவழியாக கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

2029 மக்களவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு, எதிா்க்கட்சிகளின் எதிா்கால செயல்திட்டம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் மோடி அரசை எதிா்கொள்வதற்கான கூட்டு வியூகம், கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகளுக்குத் தீா்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

Story image

ANI

திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு

கடந்தாண்டு நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியே களம் கண்ட நிலையில், அப்போதே இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக ஆம் ஆத்மி அறிவித்துவிட்டது.

இதனிடையே, தமிழ்நாடு பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோத்து, ஆட்சியிலும் பங்கு பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் தங்களின் முதுகில் குத்திவிட்டதாகவும், துரோகம் இழைத்துவிட்டதாகவும் திமுக கடுமையாக சாடியது.

காங்கிரஸுடன் உறவு முறிந்துவிட்டதால், ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தவெகவுக்கு அழைப்பில்லை

இந்தியா கூட்டணியில் திமுகவுக்கு பதிலாக தவெக இணையும் என்று சிவசேனை உத்தவ் கட்சி நிர்வாகி சஞ்சய் ரெளத் தெரிவித்திருந்த நிலையில், தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

Summary

INDIA alliance meeting has begun in Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.