ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க கனகபுராவுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

News image

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்.

Updated On :7 ஜூன் 2026, 12:20 pm IST

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க கனகபுராவுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

சிவகுமார் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, அவரது தொகுதியான கனகபுராவிற்கு செல்வது இதுவே முதல் முறையாகும். இந்தப் பயணத்தின் போது, சிவகுமார் சக பயணிகளை வாழ்த்தியதோடு அவர்களுடன் உரையாடவும் செய்தார். பெங்களூரு மக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவே முதல்வர் சிவகுமார் மெட்ரோவில் பயணித்ததாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகுமார் விதான் சவுதா நிலையத்திலிருந்து கனகபுரா சாலையில் உள்ள கடைசி நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கனகபுரா சென்றடைந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், நான் முதல்வரானதும் தொகுதி மக்கள் என்னைச் சந்திக்க விரும்பினர். ஆனால் என்னால் அவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.

நானும் அவர்களை பெங்களூருக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். நான் அவர்களைச் சந்திக்க வருவதாகக் கூறியிருந்தேன். எனவே, எனது மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிப்பதற்காக எனது தொகுதிக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும். கடந்த 40 ஆண்டுகளாக என்னை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவிப்பது எனது கடமையாகும் என்று தெரிவித்தார்.

கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் கடந்த ஜூன் 3ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 13 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.

Summary

Karnataka Chief Minister D K Shivakumar travelled by Metro rail on Sunday while heading to Kanakapura to participate in a "gratitude tour" aimed at thanking people of his constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.