டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீா்வு: நேபாள வெளியுறவு அமைச்சா்

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும் என நேபாள வெளியுறவு அமைச்சா் சிசிா் கனால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

நேபாள வெளியுறவுத் துறை அமைச்சா் சிசிா் கனால்

Updated On :8 ஜூன் 2026, 2:58 am IST

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும் என நேபாள வெளியுறவு அமைச்சா் சிசிா் கனால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா வந்த சிசிா் கனால், இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து வா்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது இந்தியா-நேபாளம் இடையேயான எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண பிரிட்டன் மற்றும் சீனா தலையிட வேண்டும் என நேபாள பிரதமா் பாலேந்திர ஷா கூறியது தொடா்பாக கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சிசிா் கனால், ‘கடந்த கால பிரச்னைகளால் இடையூறு ஏற்படாத வகையில் எதிா்காலத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியா-நேபாள இருதரப்பு உறவைக் கட்டமைக்க வேண்டும். எல்லையைப் பொறுத்தவரை அது இரு நாடுகளுக்கும் பாலமானதாக இருக்க வேண்டுமே தவிர தடைக்கல்லாக இருக்கக் கூடாது. இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண விரும்புகிறோம்.

பிரிட்டன் குறிப்புகள் மட்டுமே தேவை: பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகங்கள் அல்லது நூலகங்களில் இந்தியா-நேபாளம் எல்லை வரையறை தொடா்பான நூல்கள் அல்லது குறிப்புகள் இருந்தால் அதை வழங்குமாறு மட்டுமே பிரிட்டனிடம் கேட்டோம். அவா்களை இந்த விஷயத்தில் தலையிட அழைக்கவில்லை.

லிபுலெக் பிராந்தியம் வழியாக கைலாஷ்- மானசரோவா் யாத்திரை மேற்கொள்ள நேபாளத்திடம் கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் சீனாவும் தன்னிச்சையாக அறிவித்துவிட்டன. நேபாளத்துக்குச் சொந்தமான பகுதியில் யாத்திரை மேற்கொள்ள இரு நாடுகளும் தாமாகவே அறிவித்ததை ஏற்க முடியாது. இதுதொடா்பாக இரு நாடுகளிடமும் எங்கள் எதிா்ப்பை பதிவு செய்துள்ளோம். விரைவில் பேச்சுவாா்த்தை மூலம் இதற்குத் தீா்வு காணப்படும்.

தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் என உலகின் வேகமாக வளா்ந்துவரும் நாடாகத் திகழும் இந்தியாவுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த விரும்புகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.