கேரளத்தில், பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து நிபுணர்கள் உடனான ஆலோசனைகளுக்குப் பிறகு அரசு முடிவு எடுக்கும் என மாநில பொது கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில், பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து பொது கல்வி இயக்குநரகம் கேரள மாநில அரசுக்கு விரிவான அறிக்கையைச் சமர்பித்துள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன், இந்த விவகாரம் குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டிய அவசரமில்லை எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி, இன்று (ஜூன் 6) செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
”பொது கல்வி இயக்குநர் அறிக்கை சமர்பித்துள்ளது உண்மைதான். ஆனால், இந்தத் திட்டம் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் உடனான ஆலோசனைகளுக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும். மத்திய அரசின் ஒப்பந்தத்தில் முந்தைய அரசு கையெழுத்திட்டு நிதியைப் பெற்றுள்ளனர்.
உடனே முடிவு எடுக்க வேண்டிய அவசரமில்லை. எனவே, அறிக்கையை ஆய்வு செய்து பின்னரே முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, கேரளத்தின் முந்தைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசு பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக மத்திய அரசு உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், பிஎம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் கல்விக்குள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை மத்திய அரசு திணிக்க முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
Kerala's Minister for General Education, N. Shamsudheen, has stated government will make a decision regarding the PM SHRI scheme after consulting with experts.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு பத்ம ஸ்ரீ விருது!

அடிபணிய மாட்டோம்! - PM SHRI குறித்த கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்

கிரேட் நிகோபாா் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்: காங்கிரஸ் வலியுறுத்தல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




