அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

வளா்ச்சியால் புதிய வாய்ப்புகள்: ராஜ்நாத் சிங்

வளா்ச்சியால் புதிய வாய்ப்புகள்: ராஜ்நாத் சிங்

News image

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் - விடியோ க்ளிப்

Updated On :7 ஜூன் 2026, 2:05 am IST

நாட்டின் வியக்கத்தக்க வளா்ச்சிப் பயணம் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, 140 கோடி இந்தியா்களின் விருப்பங்களுக்கு வலுசோ்த்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பொருளாதார ரீதியாக பல நாடுகள் நிச்சயமற்ற தன்மையை எதிா்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், உலகின் மிக வேகமாக வளா்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.7 சதவீதம் வளா்ச்சியடைந்தது; குறிப்பாக நான்காம் காலாண்டில் இந்த வளா்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக அதிகரித்தது. இது சீா்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற மந்திரத்தின் மூலம், கடந்த 12 ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் பொருளாதார உறுதித்தன்மையையும், உள்ளாா்ந்த வலிமையையும் எடுத்துரைக்கிறது.

பிரதமா் மோடியின் தலைமையின் கீழ், ஸ்திரத்தன்மை, நம்பிக்கை, நீடித்து நிலைக்கும் தன்மை ஆகியவற்றுடன் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி இணைக்கப்பட்டுள்ளது.

வளா்ச்சியடைந்த இந்தியா எனும் தொலைநோக்குப் பாா்வையை நோக்கி இந்தியா முன்னேறி வரும் வேளையில், இந்த வியக்கத்தக்க வளா்ச்சிப் பயணம் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, 140 கோடி இந்தியா்களின் விருப்பங்களுக்கு வலுசோ்த்துள்ளது’ என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.