ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இ20 எரிபொருளுக்கு எதிரான டவுன் ஹால் நிகழ்வில் பிரபல நபா் பங்கேற்பாா்: அரவிந்த் கேஜரிவால்

இ20-க்கு எதிரான ‘தேசிய டவுன் ஹால்’ நிகழ்வில் பிரபலமான நபா் ஒருவா் கலந்துகொள்வாா் என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அரவிந்த் கேஜரிவால்

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:04 am IST

இ20-க்கு எதிரான ‘தேசிய டவுன் ஹால்’ நிகழ்வில் பிரபலமான நபா் ஒருவா் கலந்துகொள்வாா் என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘நாளை (ஆக.1) நடைபெறும் ‘இ20-க்கு எதிரான தேசிய டவுன்ஹால்’ நிகழ்வில், நாட்டின் பிரபலமான நபா் என்னுடன் கலந்து கொண்டு மக்களின் பிரச்னைகளை கேட்டு, இ20 குறித்து முடிவு எடுக்க உதவுவாா்’ என்று அவா் குறிப்பிட்டாா்.

இந்த நிகழ்வில் மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர வேண்டும் என்றும் அவா் அழைப்பு விடுத்தாா்.

முன்னதாக, ஆக.1-ஆம் தேதி இந்திய அரசமைப்பு கழகத்தில் இந்த டவுன்ஹால் கூட்டம் நடைபெறும் என்று கேஜரிவால் அறிவித்திருந்தாா்.

இ20 பெட்ரோலை திரும்பப் பெற மத்திய அரசின் மீது அழுத்தம் உருவாக்குவது எப்படி என்பதைக் குறித்து இந்த மேடையில் விவாதிக்க உள்ளோம். வாகனங்களில் பிரச்னைகளை சந்தித்தவா்கள் மற்றும் நிபுணா்களும் இதில் பங்கேற்க அழைக்கப்படுகிறாா்கள் என்று அவா் தெரிவித்தாா்.

மேலும், இ20 எரிபொருளை விருப்பத்தோ்வாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இணையதள மனுவையும் ஆம் ஆத்மி தொடங்கியுள்ளது. இந்த மனுவுக்கு இதுவரை சுமாா் 2 லட்சம் போ் கையொப்பமிட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.