ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பஞ்சாப் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி தில்லி பாஜகவினர் போராட்டம்!

மாநிலக் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி தில்லி பாஜகவினர் போராட்டம் நடத்தியது பற்றி..

Delhi BJP protests against AAP

தில்லி பாஜகவினர் போராட்டம்! - X

Published On :30 ஜூலை 2026, 1:11 pm IST

பஞ்சாபில் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், மாநிலக் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி தில்லி பாஜகவினர் மண்டி ஹவுஸ் அருகே உள்ள ஆத் ஆத்மி கட்சியின் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

தில்லி பாஜக தலைவர் ஹர்ஷ் மல்ஹோத்ரா தலைமையில், ஃபெரோஸ்ஷா சாலையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்திற்கு அருகே திரண்ட போராட்டக்காரர்கள், மாநிலத்தில் கடந்த நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் ஆறு தேர்வின் வினாத்தாள் கசிந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ மற்றும் பிற அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பஞ்சாபில் தங்கள் ஆட்சிக் காலத்தில் கடந்த ஆண்டுகளில் எந்த வினாத்தாள் கசிவும் நடைபெறவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் சமீபத்தில் கூறியிருந்தார்.

இருப்பினும், இரண்டு மையங்களில் நடைபெற்ற தேர்வின்போது சில மாணவர்கள் டிஜிட்டல் பேனாக்களைப் பயன்படுத்தி முறைகேடு செய்ய முயன்றதாகவும், ஆனால் அவர்கள் உடனடியாகப் பிடிக்கப்பட்டதாகவும் வினாத்தாள் கசியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாஜகவின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர், இதுவரை ஆறு தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்ததாகவும், இது மாநிலத்தில் 30 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The Delhi BJP on Thursday staged a protest at the AAP office near Mandi House here, demanding the resignation of the Punjab education minister over alleged exam paper leaks in the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.