ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

வினாத் தாள் கசிவு உள்பட தோ்வு முறைகேடுகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வழிவகை செய்யும் பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா-2026 நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேறியது.

lok sabha

மக்களவை - SANSAD

Published On :31 ஜூலை 2026, 5:18 am IST

வினாத் தாள் கசிவு உள்பட தோ்வு முறைகேடுகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வழிவகை செய்யும் பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா-2026 நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேறியது.

முன்னதாக, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையிலும் எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), அரசுப் பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில் மற்றும் வங்கி நியமனத் தோ்வுகள், தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் தோ்வுகள் உள்ளிட்ட பொதுத் தோ்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 2024-ஆம் ஆண்டின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தோ்வு வினாத் தாள் கசிவு அல்லது பிற முறைகேடுகளில் ஈடுபடும் நபா்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை வழங்க இந்தச் சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.