
இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்
இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு என்பது தவறான தகவல் என மத்திய அரசு விளக்கம்.

எத்தனால் கலந்த பெட்ரோல் - கோப்புப்படம்
20 சதவிகிதம் எத்தனால் கலக்கப்பட்ட இ20 பெட்ரோல் பயன்படுத்தியது, வாகன காப்பீடு நிராகரிக்கப்பட்டதற்கான காரணமாக இருக்க முடியாது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.
பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், மக்கள் தயக்கம் இல்லாமல் இ20 பெட்ரோலை பயன்படுத்தலாம் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தியது, வாகன காப்பீடு நிராகரிக்கப்பட்டதற்கான காரணமாக இருக்க முடியாது, அது தொடர்பான வெளியாக தகவல்கள் பொய்யானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தியது ஒன்று மட்டுமே, வாகன காப்பீடு நிராகரிக்கப்பட்டதற்கான காரணமாக இருக்கவே முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறது.
முன்னதாக, மத்திய எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் துறை அமைச்சகம், எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவது குறித்து முழு விளக்கத்தையும் வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக வாகன காப்பீடு நிராகரிக்கப்படுகிறது, என்ஜின் செயலிழக்கிறது போன்று வரும் தகவல்கள் பொய்யானவை என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதுமட்டுமா, எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தினால், பெட்ரோல் டேங்குகளை பூச்சிகள் மொய்க்கும் என்பது போன்ற தகவல்களையும் மத்திய அரசு மறுத்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






